முகப்பு
உலகம்

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜிநாமா

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்மா பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
சவேந்திர சில்வா
பகிர்:

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தார்.

இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவியை வருகிற  மே-31 ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள விகம் லியனகே ஜுன் 1 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →