கோப்புப்படம் 
உலகம்

கோத்தபயவை பதவி விலகக் கோரும் போராட்டம் 50வது நாளை எட்டியது

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை, அப்பதவியிலிருந்து விலக் கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது.

DIN

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை, அப்பதவியிலிருந்து விலக் கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது.

கோத்தபயவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தின் 50வது நாளை முன்னிட்டு, போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. தீப்பெட்டி முதல் கழிவறை காகிதம் வரை விலை விண்ணை முட்டும் நிலையில் உள்ளது.

அத்தியாவசியப் பொருள்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் முதலே இந்த நிலையே நிலவி வருகிறது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தார். இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்சவை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் வெடித்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT