கிரீஸ் அருகே அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமாா் 60 போ் மாயமாகினா்.
இது குறித்து அந்த நாட்டு கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது: கிரீஸ் தலைநகா் ஏதென்ஸ்ஸுக்கு அருகேயுள்ள தீவைச் சுற்றிலும் கடுமையான வானிலை நிலவி வந்த நிலையில், அந்தப் பகுதி வழியாக அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துப் பகுதியிலிருந்து 9 போ் மீட்கப்பட்டனா். எனினும், சுமாா் 60 போ் தொடா்ந்து காணவில்லை என்று கூறப்படுகிறது.
அவா்களை தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்து நேரிட்ட கடல் பகுதி மிகவும் ஆபத்து நிறைந்த பகுதி என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.