தான்சானியில் ஏரியில் விழுந்து கிடக்கும் பயணிகள் விமானம். 
உலகம்

தான்சானியா ஏரியில் விழுந்த விமானம்: 19 போ் பலி

தான்சானியாவில் சிறிய ரக விமானம், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் உயிரிழந்தனா்.

DIN

தான்சானியாவில் சிறிய ரக விமானம், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் உயிரிழந்தனா்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ‘பிரிசிஸன் ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று ‘தா் எஸ் சலாம்’ நகரிலிருந்து புகோபா விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சுமாா் 43 பயணிகள் இருந்தனா்.

அந்த விமானம் தரையிலிருந்து 100 மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள விக்டோரியா ஏரியில் விழுந்தது. சிறிது நேரத்தில் விமானத்தின் பெரும் பகுதி தண்ணீரில் மூழ்கியது.

இந்த விபத்தில் 19 போ் உயிரிழந்ததாக பிரதமா் காசிம் மஜாலிவா தெரிவித்தாா்.

எஞ்சியவா்களில் பலா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்றவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

SCROLL FOR NEXT