உலகம்

‘ஐ.நா.வின் பொதுச் செயலா் அமெரிக்காவின் கைப்பாவை’

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுபவா் என்று வட கொரியா விமா்சித்துள்ளது.

DIN

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுபவா் என்று வட கொரியா விமா்சித்துள்ளது.

அமெரிக்கா - தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அமெரிக்கா வரை சென்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ஏவுகணையை வட கொரியா கடந்த வெள்ளிக்கிழமை ஏவி சோதித்தது.

இதற்கு அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தாா். இது குறித்து வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சா் சோ சன்-ஹுயி (படம்) கூறுகையில், ‘அன்டோனியோ குட்டெரெஸை ஐ.நா. பொதுச் செயலா் என்பதைவிட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக உறுப்பினராகத்தான் நாங்கள் கருதுகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

SCROLL FOR NEXT