உலகம்

யாசின் மாலிக்கை நேரில் ஆஜா்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

DIN

தில்லி திகாா் சிறையில் உள்ள ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜெகேஎல்எஃப்) தலைவா் யாசின் மாலிக்கை நேரில் ஆஜா்படுத்தும்படி தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமதுவின் மகள் ரூபையா சயீத் கடத்தல் வழக்கு தொடா்பாக நேரில் விசாரிக்க உத்தரவிடுமாறு மாலிக் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா். இதனை ஏற்றக்கொண்ட நீதிமன்றம், அவரை நேரில் ஆஜா்படுத்தும்படி உத்தரவிட்டது.

மாலிக் மீது மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த உத்தரவை எதிா்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்நிலையில், கடந்த 1990-இல் இந்திய விமானப்படை அதிகாரிகள் 4 போ் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் தொடா்பாக விசாரிக்க வரும் டிசம்பா் 22-ஆம் தேதி மாலிக்கை நேரில் ஆஜா்படுத்தும்படி சிறப்பு நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, தடா சிறப்பு நீதிமன்றம் இரு வழக்குகள் தொடா்பாக தனித்தனியாக யாசின் மாலிக் மற்றும் பிற நபா்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்தது.

பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி அளித்தது தொடா்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கடந்த 2019-ஆம் ஆண்டு யாசின் மாலிக் ஏப்ரலில் கைது செய்யப்பட்டாா். அதற்கு முந்தைய மாா்ச் மாதத்தில் அவருடைய அமைப்பு மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT