எலான் மஸ்க் பெயரை நெற்றியில் பச்சைக்குத்திக்கொண்டுள்ள இளைஞர் 
உலகம்

செவ்வாய் கிரகம் செல்ல ஆசை.. 'கஜினி' பாணியில் எலான் மஸ்க் ரசிகன்!

செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல ஆசைப்பட்டு இளைஞர் செய்த  செயல்!  இளைஞரின் இந்த செயல் எலான் மஸ்க்கை வெகுவாக கவர்ந்துள்ளது. 

DIN


உலகின் செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சைக்குத்திக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தின் மூலம் எலான் மஸ்க் தன்னையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச்செல்வார் என்ற கனவுடன் அந்த இளைஞர் இத்தகைய செயலைச் செய்துள்ளார். 

பிரேசிலைச் சேர்ந்த இ ளைஞர் ரோட்ரிகோ. உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க்கால் இவர் அதிகம் கவரப்பட்டுள்ளார். இதனால், எலான் மஸ்க்கின் பெயரை அவரின் கனவுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுடன் சேர்த்து நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார்.

இது தொடர்பாக இளைஞர் ரோட்ரிகோ பேசும்போது, எலான் மஸ்க் எனக்கானவர். அவர் மீதான என் அன்பை விவரிக்க முடியாது. அவர் என்ன செய்தாரோ, என்ன செய்ய இருக்கிறாரோ, அவை அனைத்தும் மக்களுக்கானது. அவர் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச்செல்லவுள்ளார். இதன் மூலம் அவரின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். அவருடன் சேர்ந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் ராக்கெட்டில் 2024ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். 

கடந்த 2016ஆம் ஆண்டு வரை ரோட்ரிகோ பிரேசிலில் சிறைத் துறை அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT