உலகம்

உலகின் பெரிய பூனையைப் பார்த்ததுண்டா? செல்லப்பிராணியின் உலக சாதனை!

அமெரிக்காவைச் சேர்ந்தவரின் செல்லப்பிராணி, உலகின் பெரிய பூனை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த வீட்டுப் பூனை என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது.

DIN

அமெரிக்காவைச் சேர்ந்தவரின் செல்லப்பிராணி, உலகின் பெரிய பூனை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த வீட்டுப் பூனை என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது.

உலகில் உள்ள பலரும் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அந்தவகையில் பூனைகள் உலகம் முழுக்க உள்ள மக்கள் விரும்பும் செல்லப்பிராணியாக இருந்து வருகிறது. 

அமெரிக்காவின் மிச்சிகன் நகரின் வசித்துவரும் ஃபென் என்ற இளைஞர் பூனை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அவர் வளர்த்துவரும் ஃபென்ரிர் என்ற பூனை உலகின் மிகப்பெரிய வீட்டுப் பூனை என்ற சாதனையைப் படைத்துள்ளது. 

சாவன்னா என்ற கலப்பின ரகத்தைச் சேர்ந்த இந்த பூனை உலகின் மிக உயரமான பூனை எனவும், பூனைகளுக்கான சர்வதேச சங்கம் இதனை அங்கீகரித்துள்ளது. இந்த பூனை 47.83 செ.மீ. (18.83 அங்குலம்) உயரம் கொண்டது.

இதற்கு முன்பு இந்த பூனைக்கு முன்பு பிறந்த அர்குட்டுரஸ் எனப் பெயரிடப்பட்ட பூனை உலகின் மிக உயரமான பூனை என்ற சாதனையை படைத்திருந்தது. அர்குட்டுரஸ் 48.40 செ.மீ. (19.08 அங்குலம்) உயரம் கொண்டது.

இது குறித்து பூனையின் உரிமையாளரான ஃபென், அர்குட்டுரஸ் பூனைக்கு வழங்கும் உணவையே ஃபென்ரிருக்கும் வழங்கி வருகிறேன். ஃபென்ரிருக்கு 2 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகிறது. ஆனால், அதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. எனினும் எனக்கு இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. கின்னஸ் சாதனையை ஃபென்ரிர் முறியடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மோந்தா’ புயல்: சென்னையில் இரவுமுதல் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும்!

விஜய்யின் புதிய அணுகுமுறை! திருமாவளவன் விமர்சனம்!

Hattrick 100 கோடி!” விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

சிறப்பு தீவிர திருத்தம்: நவ. 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

‘பாட்டா இந்தியா' நிகர லாபம் 73% சரிவு!

SCROLL FOR NEXT