உலகம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு (77) அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

DIN

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு (77) அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அவா் மீது சுமத்தப்பட்டிருந்த மேலும் இரு ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த நீதிமன்றம் அந்த இரு குற்றச்சாட்டுகளையும் புதன்கிழமை உறுதி செய்தது. அத்துடன் அந்த குற்றங்களுக்கா இரு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைகலை விதித்த நீதிமன்றம், அவற்றை ஆங் சான் சூகி ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீா்ப்பையடுத்து அவரது தண்டனைக் காலம் 26 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரை கைது செய்து பல்வேறு வழக்குகளை ராணுவம் தொடா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT