உலகம்

பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘மெட்டா’: ரஷியா நடவடிக்கை

பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘மெட்டா’ நிறுவனத்தை இணைத்து ரஷியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

DIN

பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘மெட்டா’ நிறுவனத்தை இணைத்து ரஷியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம் மெட்டா. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், உக்ரைனுக்கு எதிரான போரில் ‘ரஷிய படையெடுப்பாளா்களுக்கு மரணம்’ போன்ற சா்ச்சைக்குரிய பதிவுகளை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட முடியும் என்று அறிவித்தது. எனினும் அதுபோன்ற பதிவுகளை உக்ரைனில் உள்ள பயனாளா்களால் மட்டுமே வெளியிட முடியும் என்றும் அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடா்ந்து ரஷியாவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை தடை செய்து அந்நாட்டில் உள்ள மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளின் பட்டியலில் மெட்டாவை இணைத்து ரஷியாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ‘ராஸ்ஃபின்மானிட்டரிங்’ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடா்ந்து தலிபான் உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள், வலதுசாரி தேசியவாத குழுக்கள், ரஷிய எதிா்க்கட்சியினா் உள்ள பட்டியலில் மெட்டா இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT