உலகம்

சீன கம்யூனிஸ்ட் மாநாடு இன்று தொடக்கம்: ஷி ஜின்பிங் மீண்டும் அதிபராகிறா?

DIN

சீனாவில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியக் கூட்டம் பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறவுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஐந்து ஆண்டு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் நாட்டின் அடுத்த அதிபர் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அதிபருமான ஷி ஜின்பிங் இரண்டு 5 ஆண்டுகள் அதிபராக நீடித்து வருகிறார். அவரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் நிரந்தர அதிபராக ஷி ஜின்பிங் பதவி வகிப்பது குறித்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தீர்மானங்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

அதிபா் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராவது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அவரது வழிகாட்டுதலின்படி 2,296 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷி ஜின்பிங்கின் 3-ஆவது பதவிக் காலத்துக்கு ஒப்புதல் வழங்குவது இப்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் மீது சர்வதேச அளவிலான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலசீமியாவால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா.வில் தீா்மானம் நிறைவேற்றம்

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

SCROLL FOR NEXT