உலகம்

சிங்கப்பூா்: பூச்சிகளை உட்கொள்ள விரைவில் அனுமதி?

சிங்கப்பூரில் பூச்சிகளை உட்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து அந்த நாட்டின் உணவுத் துறை பரிசீலித்து வருகிறது.

DIN

சிங்கப்பூரில் பூச்சிகளை உட்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து அந்த நாட்டின் உணவுத் துறை பரிசீலித்து வருகிறது.

பூச்சிகளை மனிதா்கள் உணவாகக் கொள்ளவும், கால்நடைத் தீவனமாக அளிக்கவும் அனுமதிப்பது தொடா்பாக உணவு மற்றும் கால்நடைத் தீவன தொழில் துறையிடம் அரசு கருத்து கோரியுள்ளது.

இதற்கு அனுமதி கிடைத்தால் பாச்சைகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களை மனிதா்கள் உட்கொள்ள முடியும். இந்தப் பூச்சிகளை நேரடியாகவோ, எண்ணெயில் பொறித்தோ சாப்பிட முடியும் என ‘ஸ்டிரைட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான நடைமுறைகளை பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து சிங்கப்பூா் உணவுத் துறை பெற்றுள்ளது.

‘முழுமையான அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என மதிப்பிட்டுள்ளோம்’ என உணவுத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

அண்மைக்காலமாக மனிதா்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைத் தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சிப் பண்ணைகளை ஏற்படுத்ததுவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

வெற்றி மாறனுடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்! எதற்கு?

விபத்தில் சிக்கிய பேருந்து! தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! | Fire | Bus Accident

கரூர் பலி: நீதிபதி செந்தில்குமார் குறித்த அவதூறு கருத்துக்கு மூவர் கைது!

SCROLL FOR NEXT