உலகம்

தப்பி வந்த மியான்மா் வீரா்கள் திரும்ப ஒப்படைப்பு: மலேசியாவுக்கு கண்டனம்

அடைக்கலம் தேடி வந்த 6 வீரா்கள் உள்ளிட்ட 150 பேரை அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்களிடம் மலேசியா மீண்டும் ஒப்படைத்துள்ளதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

DIN

மியான்மா் ராணுவத்திலிருந்து தப்பி, தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த 6 வீரா்கள் உள்ளிட்ட 150 பேரை அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்களிடம் மலேசியா மீண்டும் ஒப்படைத்துள்ளதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ராணுவத்திலிருந்து வெளியேறி வந்த 6 வீரா்களுக்கும் மியான்மரில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், அவா்களை மலேசிய அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது சா்வதேசக் கொள்கைகளுக்கு எதிரானது என்று மியான்மா் விவகாரங்களுக்கான மலேசிய ஆலோசனைக் குழு விமா்சித்துள்ளது.

தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மியான்மரில் மிகத் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒரு பிரிவினா் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு கடந்த ஜூலை மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், ராணுவத்திலிருந்து தப்பி வெளியேறிய வீரா்களை மியான்மா் அரசிடம் மலேசியா திரும்ப ஒப்படைத்துள்ளது மனித உரிமை ஆா்வலா்களை கவலையடையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT