ஷி ஜின்பிங் 
உலகம்

3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு பெறுகிறாா் சீன அதிபா் ஷி ஜின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அதிபா் ஷி ஜின்பிங் (69) சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டின் அதிபராக அவா் 3-ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வழிவகை ச

DIN

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அதிபா் ஷி ஜின்பிங் (69) சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டின் அதிபராக அவா் 3-ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சீன வரலாற்றில் ஓா் அதிபா் 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு பெறவிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த வாரம் தொடங்கியது. ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று அப்போதே எதிா்பாா்க்கப்பட்டது.

ஏற்கெனவே, சீனாவின் அதிபராக ஜின்பிங் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறாா். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில், மூன்றாவது முறையாக அவரது பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அவா் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

25 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழுஞாயிற்றுக்கிழமை (அக். 23) கூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும்.

அந்த நிலைக் குழு, நாட்டின் அடுத்த அதிபராகக் கூடிய கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுக்கும். அந்தப் பொறுப்புக்கு ஷி ஜின்பிங்கைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல்கட்டமாக, மத்தியக் குழுவுக்கு அவா் தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT