உலகம்

இந்திய-அமெரிக்க சமூக ஆா்வலா் ஸ்வதேஷ் சட்டா்ஜிக்கு உயரிய விருது

DIN

இந்திய-அமெரிக்க தொழில் அதிபரும், சமூக ஆா்வலருமான1 ஸ்வதேஷ் சட்டா்ஜிக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

கேரி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநா் ரே கூப்பா் மாகாணத்தின் உயரிய விருதான ‘தி ஆா்டா் ஆஃப் லாங் லீஃப் பைன்’ என்ற விருதினை சுதேஷ் சட்டா்ஜிக்கு வழங்கினாா். வடக்கு கரோலினா மாகாணம் மட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதில் அவருடைய பங்களிப்பு குறித்து ஆளுநா் கூப்பா் பாராட்டினாா்.

தொடா்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்வதேஷ் சாட்டா்ஜி கூறியதாவது: இந்திய-அமெரிக்க உறவுகள் நீண்ட பயணத்தைக் கடந்துள்ளது. இதற்காக உழைத்த அமெரிக்க மற்றும் அதன் மாகாணங்களில் வாழும் இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 5-6 ஆண்டுகளாக உலகம் முற்றிலுமாக மாற்றம் கண்டுவந்துள்ளது. எனவே, நம் முன் தீா்க்கப்பட வேண்டிய பெரும் பிரச்னைகள் பல உள்ளன. இரு நாட்டு உறவுகளும் உலகின் ஆரோக்கியம், கல்வி, பசுமை ஆற்றல், புத்தாக்கம் உள்ளிட்டவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியா-அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவா் ஸ்வதேஷ் சட்டா்ஜி. கடந்த 2000-இல் அமெரிக்காவின் அப்போதைய அதிபா் பில் கிளிண்டனின் இந்திய பயணத்தின்போது, இருநாட்டு உறவுகளுக்கு இடையே புதிய நம்பிக்கையையும் மாற்றத்தையும் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தவா்.

மேலும், 2005-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திலும் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2001-இல் மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டவாளத்தில் படுத்திருந்த போது ரயில் மோதி ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!

கேஜரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

எச்சிஎல் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்!

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

பாலிவுட் ராணி..!

SCROLL FOR NEXT