உலகம்

உலகத்தின் வளர்ச்சிக்கு சீனா தேவை! அதிபராகும் ஷி ஜின்பிங் பேச்சு

DIN

உலகத்தின் வளர்ச்சிக்கு சீனா தேவை என அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவினர் ஷி ஜின்பிங்கை அடுத்த அதிபராக தேர்வு செய்துள்ளனர். 

இதன் மூலம், சீன வரலாற்றில் 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு பெறவிருக்கும் ஒரே அதிபர் என்ற பெருமையை ஷி ஜின்பிங் பெற்றுள்ளார். 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த வாரம் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் 69 வயதான ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று அப்போதே எதிா்பாா்க்கப்பட்டது.

ஏற்கெனவே, சீனாவின் அதிபராக ஜின்பிங் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறாா். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில், மூன்றாவது முறையாக அவரது பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அவா் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்

அதனைத் தொடர்ந்து 25 உறுப்பினா்களைக் கொண்ட முக்கியக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவை ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.23) தேர்வு செய்தது. மேலும், அக்குழுவுக்கு ஷி ஜின்பிங்கை தலைமை பொறுப்புக்குத் தேர்வு செய்துள்ளது. 

அப்போது பேசிய ஷி ஜின்பிங், உலகத்தின் உதவி இல்லாமல் சீனாவின் வளர்ச்சி சாத்தியமில்லை. அதேபோன்று உலகத்தின் வளர்ச்சிக்கும் சீனா தேவை. எங்கள் மக்கள் மற்றும் எங்கள் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் விடாமுயற்சியுடன் முன்னோக்கி செயல்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT