ரிஷி சுனக் 
உலகம்

பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்: லிஸ் டிரஸ் வாழ்த்து

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன. கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் ரிஷி சுனக்கிற்கு 128 எம்.பி.க்களின் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமராவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் அவருக்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், நமது அடுத்த பிரதமராகவும் நியமிக்கட்டதற்கு வாழ்த்துகள். உங்களுக்கு எனது அனைத்து ஆதரவும் உண்டு” எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதன்முறையாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

களைகட்டும் ஜல்லிக்கட்டு.. பரபரக்கும் மதுரை.. காளைகளின் கயிறு விற்பனை அமோகம்!

தமிழகம் வந்தார் ராகுல் காந்தி! கூடலூர் பள்ளி நிகழ்வில் பங்கேற்கிறார்!!

வா வாத்தியார் வெளியீடு! எம்ஜிஆர் நினைவிடத்தில் கார்த்தி மரியாதை!

உலகத் தரம் வாய்ந்த நடிப்பு..! எகோ திரைப்படத்தைப் பாராட்டிய தனுஷ்!

ஈரான் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல்?

SCROLL FOR NEXT