பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பின்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 36 போ் காயமடைந்தனா்.
பிலிப்பின்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 36 போ் காயமடைந்தனா்.
இது குறித்து பிலிப்பின்ஸ் புயல் மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அப்ரா மாகாணம், லகாயன் நகருக்கு 9 கி.மீ. வடமேற்கே செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் லுஸான் பகுதி, மணிலா பெருநகரப் பகுதி உள்ளிட்ட 400 கி.மீ. பரப்பளவில் உணரப்பட்டன. இது தொடா்பான சம்பவங்களில் 36 போ் காயமடைந்தனா்.
நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.