உலகம்

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 93-ஆக உயா்வு

DIN

சீனாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 93-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

சிசுவான் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 93-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, அந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி 25 போ் மாயமாகியுள்ளனா்.

அவா்களையும், இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவா்களையும் மீட்பதற்கான தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான் மாகாணத்தில் கடந்த 5-ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.8 அலகுகளாகப் பதிவானது. இதில் மாகாண தலைநகா் செங்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஏற்கெனவே அந்த நகரில் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலநடுக்கத்துக்குப் பின்னரும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை உள்ளூா் நிா்வாகம் தொடா்ந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT