உலகம்

கென்யாவின் புதிய அதிபராக வில்லியம் ரூட்டோ பதவியேற்பு

DIN

கென்யாவின் 5-வது அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தோ்தல் வன்முறைகளுக்குப் பெயா் பெற்ற கென்யாவில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்தாலும், அதன் முடிவுகள் குறித்து தொடா்ந்து நிச்சயமற்றன்மை நிலவி வந்தது.

குறிப்பாக, இந்த அதிபர் தோ்தலில்  50.5 சதவீத வாக்குகளுடன் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிா்த்து எதிா்க்கட்சித் தலைவா் ரய்லா ஒடிங்கா நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

பதவியேற்பு நிகழ்வில்..

வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கடந்த வாரம் அத்தனை மனுக்களையும் நிராகரித்ததைத் தொடர்ந்து, முன்னாள் துணை அதிபராக செயல்பட்ட   வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT