உலகம்

ராணியின் ஊர்வலத்தில் ஒன்றாகத் தோன்றிய இளவரசர்கள் வில்லியம்-ஹாரி

DIN

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டருக்கு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. 

இதில், அரசர் மூன்றாம் சார்லஸைத் தொடர்ந்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் சார்லஸ் ஆகியோர் ஒருவருடன் ஒருவராக ஊர்வலத்தைப் பின் தொடர்ந்தனர்.

பிரிட்டனின் நீண்ட கால ராணியான எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை (செப்.8) இரவு காலமானார். அவரது மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டனின் அடுத்த அரசரானார். 

ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரால் அரண்மனையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

இந்நிலையில், இன்று ராணியின் உடல் ராணுவ மரியாதையுடன் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. 

ரதத்தில் கொண்டுவரப்பட்ட ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது கிரீடம் வைத்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் அரசர் சார்லஸ், இளவரசர் ஆன்னி, இளவரசர் ஆன்ட்ரிவ், இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் கலந்துகொண்டனர். 

இதேபோன்று இளவசர் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் ராணியின் ஊர்வலத்தில் ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் வந்தனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இளவரசர்கள் வில்லியம் - ஹாரி ஆகியோர் இணைந்து வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT