அரசி இரண்டாம் எலிசபெத் இரங்கல் குறிப்பில் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திடுகிறார்  
உலகம்

அரசி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திரெளபதி முர்மு

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார்

DIN

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார்.

லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அரசி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.   

பிரிட்டனின் நீண்ட கால ராணியான எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை (செப்.8) இரவு காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரால் அரண்மனையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.  பின்னர் அங்கிருந்து கடந்த 14ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. 

அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் இந்தியா சார்பில் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று லண்டன் புறப்பட்டார். அவருடன் வெளியுறவுத் துறை செயலாளர் வினய் குவத்ராவும் சென்றார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரம் வகுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரங்கல் குறிப்பிலும் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திட்டார். 

அதனைத் தொடர்ந்து உலக நாடுகளிலிருந்து வந்த தலைவர்களுக்காக அரசர் மூன்றாம் சார்லஸ் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரெளபதி முர்மு பங்கேற்கவுள்ளார்.

அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மறைந்த அரசியின் கணவரான அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தினருகே ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

SCROLL FOR NEXT