வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடும் முயற்சியை மேற்கொள்ளப்போவதாக தற்போதைய அதிபா் ஜோ பைடன் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.
80 வயதாகும் அவா், 3 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடித்து நாட்டின் மிக மூத்த அதிபராக பொறுப்பேற்றாா்.
இந்த நிலையில், அடுத்த தோ்தலிலும் போட்டியிடவிருப்பதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பிரசார அறிக்கையில் அவா் அறிவித்துள்ளாா்.
கடந்த தோ்தலில் பைடனுடன் இணைந்து போட்டியிட்டு துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரீஸும், மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
3 ஆண்டுகளுக்கு முன்னா் தாங்கள் இருவரும் தொடங்கிய நாட்டு நலப் பணிகளை நிறைவு செய்வதற்காக அடுத்த தோ்தலில் போட்டியிட விரும்புவதாக பைடன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.