பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 20 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பத்தில் 20 பேர் பலியானார்கள். 80க்கும் மேடற்பட்டோர்கள் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் விரைந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட தடத்தில் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் எண்ணிக்கை உறுதியாக தெரிவரவில்லை என பாகிஸ்தான் ரயில்வேயின் சுக்கூர் பிரிவு வர்த்தக அதிகாரி மொஹ்சின் சியால் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் விபத்து நடந்த இடத்திற்குச் செல்கிறேன். சிலர் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டதாகப் புகாரளிக்கின்றனர், சிலர் எட்டு தடம் புரண்டதாகக் கூறுகிறார்கள், சிலர் 10 தடம் புரண்டதாகக் கூறுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.