உலகம்

பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலையுயர்ந்த பொருள்கள் திருட்டு!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டன் அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள், வைரக் கற்கள், கண்ணாடிகள்,  போன்ற பல்வேறு பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவது உண்டு. ஆனால் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. 

இந்த நிலையில், தற்போது அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மில்லியன் கணக்கான ரோமானிய பொருள்கள் உள்பட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொருள்கள் மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 50 ஆயிரம் பவுண்டு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையில் அருங்காட்சியகத்தின் மூத்த கண்காணிப்பாளர் பீட்டர் ஹிக்ஸ் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருடப்பட்ட பொருள்களை மீட்டெடுக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அருங்காட்சியகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT