தா்மன் சண்முகரத்னம் 
உலகம்

சிங்கப்பூா் அதிபா் தோ்தல்: மும்முனைப் போட்டியில் தா்மன்

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தல் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் (படம்) அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

DIN

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தல் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

66 வயதாகும் அவருடன், இங்கோக் சாங் (75) மற்றும் டான் கின் லியான் (75) ஆகிய சீனாவைப் பூா்விகமாகக் கொண்ட இருவரும் அதிபா் தோ்தல் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, இந்தத் தோ்தலில் மும்முனைப் போட்டி நடைபெறவிருக்கிறது.

அதிகாரபூா்வ வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த மூவரில் யாரும் போட்டியிலிருந்து விலகினால், அவரது பிணைத் தொகை (சுமாா் ரூ.25 லட்சம்) திருப்பி தரப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொம்புசீவி டீசர்!

உத்தரகண்ட்டில் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து!

பிரதமர் மோடியை சந்தித்து பரிசளித்த இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்!

மே.இ.தீவுகள் பயிற்சியாளர், கேப்டனிடம் தனித்தனியாக பேசிய பிரையன் லாரா!

கருப்பு முதல் பாடல் அப்டேட்!

SCROLL FOR NEXT