யோகா குரு கிரிகோரியன் பிவோலரு | AP 
உலகம்

யோகா குரு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பாலியல் குற்றச்சாட்டில் கைதான யோகா குரு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

DIN

யோகப் பயிற்சி என்கிற பெயரில் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு வந்த 71 வயதான கிரிகோரியன் பிவோலரு மற்றும் 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பாரிஸ் நீதிமன்றம்.

கிரிகோரியன் உள்பட 15 பேரில் ஆறு பேரிடம் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதம் ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டாலும் நீதிமன்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, பிரான்ஸின் தலைநகரில் மூன்று வெவ்வேறு இடங்களில் 175 காவல் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்மன் என்கிற பெயரில் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் நடத்தும் அமைப்பு, பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து பாரிஸ் காவல்துறை சோதனையில் ஈடுபட்டது.

சர்வதேச காவல்துறை பிறப்பித்த ரெட் நோட்டீஸ் | AP

ஆசிரமத்தில் பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பாலியல் செயல்களுக்கு வற்புறுத்தப்படுவதும் அவர்கள் மீதான பாலியல் செயல்கள் விடியோவாக்கப்பட்டு அதன் மூலமாக பணம் ஈட்டுகிற குற்றங்களையும் இந்த அமைப்பு செய்து வந்துள்ளது சோதனையில் கண்டறியப்பட்டது.

முன்னதாக, கிரிகோரியன் மீது 1990-ல் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பதியப்பட்டிருந்தது. 2017-ல் பின்லாந்து, மனித கடத்தல் வழக்கில் இவரைக் குற்றவாளியாக அறிவித்தது. சர்வதேச காவல் துறை இவரைக் கைது செய்ய ரெட் நோட்டீஸ் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT