ஜார்கண்ட் மாநிலத்தில் குளிர் காய்வதற்காக தங்கள் அறைக்குள் நிலக்கரியை எரித்த நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நால்வரும் ஜார்கண்ட்டில் கணினித் துறையில் படித்து வந்ததுள்ளனர். ராகுல் குமார், அகிலேஷ் குமார், பிரின்ஸ் குமார், அர்மான் அலி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் முதியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!
கடந்த 10 நாள்களாக ஜார்கண்ட் மாநிலத்தில் குளிர் காற்று வீசிவரும் நிலையில், குளிர் காய்வதற்காக இவர்கள் அறைக்குள் நிலக்கரியை எரித்ததாகக் கூறப்படுகிறது. அதிகளவு புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணரல் ஏற்பட்டு நால்வரும் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நால்வரின் உடலும் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உறவினர்களுக்குத்தகவல் தெரிவித்திருப்பதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.