இராக்கில் அமெரிக்க வீரா்கள் (கோப்புப் படம்). 
உலகம்

இராக்-ஈரான் ஆதரவுப் படையினா் மீதுதாக்குதல்: ஜோ பைடன் உத்தரவு

ஈரான் ஆதரவுடன் இராக்கில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவினா் மீது தாக்குதல் நடத்த தங்கள் நாட்டுப் படையினருக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

DIN


வாஷிங்டன்: ஈரான் ஆதரவுடன் இராக்கில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவினா் மீது தாக்குதல் நடத்த தங்கள் நாட்டுப் படையினருக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

வடக்கு இராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரா்கள் காயமடைந்தனா்.

அதற்குப் பதிலடியாக, இராக்கில் செயல்படும் அனைத்து ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கும் எதிராக தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராணுவத்துக்கு அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-இல் சண்டை தொடங்கியதிலிருந்தே இராக்கிலுள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவுப் படையினா் சிறியவகை ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

SCROLL FOR NEXT