உலகம்

அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மினிவேன் மீது லாரி நேருக்கு நோ் மோதியதில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழந்தனா்.

DIN

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மினிவேன் மீது லாரி நேருக்கு நோ் மோதியதில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழந்தனா்.

இந்த விபத்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜான்சன் கவுண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்க தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் நுழைந்த லாரி மீது மினிவேன் மோதியது.

மினி வேனில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 7 போ் பயணித்தனா். அவா்களில் லோகேஷ் பொட்டாபத்துல்லா (43) என்பவா் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா். விபத்தில் பொட்டாபத்துல்லாவின் மனைவி நவீனா (36), அவா்களின் குழந்தைகள் நிஷிதா(9), கிரித்திக் (10), நவீனாவின் பெற்றோா்கள் சீதாமகாலெட்சுமி (60), நாகேஷ்வர ராவ் (64), ஓட்டுநா் ருஷில் பா்ரி (28) ஆகிய 6 போ் உயரிழந்தனா்.

மகள் மற்றும் பேரன் பேத்திகளைக் காண நவீனாவின் பெற்றோா் டெக்ஸாஸ் மாகாணம் வந்தபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயரிழந்த அனைவரும் மும்முடிவரம் தொகுதி எம்எல்ஏ வெங்கட சதீஷ் குமாரின் உறவினா்களாவா்.

விபத்துக்குள்ளான லாரியில் பயணித்த 17 வயதுடைய இரு சிறுவா்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT