உலகம்

6 வயது மகனின் துடுக்குத்தனத்தால் ஒரே நாளில் பிரபலமானது எப்படி?

6 வயது மகனின் துடுக்குத்தனத்தால் பணத்தை இழந்தாலும், ஒரே நாளில் பிரபலமானதாக கெய்த் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

DIN

6 வயது மகனின் துடுக்குத்தனத்தால் பணத்தை இழந்தாலும், ஒரே நாளில் பிரபலமானதாக கெய்த் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் மோகம் அதிகமாகி குழந்தைகள் கூட அதற்கு அடிமையாகி விட்டனர். சிறு குழந்தைகளின் கோரிக்கைகளுக்கு பெற்றோர்கள் செவிசாய்ப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். 

அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள செஸ்டர்பீல்ட் என்ற இடத்தில் வசிப்பவர் கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி கிரிஸ்டின் ஸ்டோன்ஹவுஸ், சமீபத்தில் இரவுக் காட்சி திரைப்படம் பார்க்க சென்றார்.

வீட்டில் கெய்த் மற்றும் அவரது 6 வயது மகன் மேசன் இருந்தனர். அப்போது கெய்த்தின் மொபைல் போனை மேசன் எடுத்து கேம் விளையாட அனுமதித்திருக்கிறார். அந்த சிறுவன் கேம் விளையாடுவதற்குப் பதிலாக, 'கிரப்ஹப்' என்ற ஆன்லைன் உணவு விநியோக செயலியைத் திறந்து, பல்வேறு உணவகங்களில் உணவை மொத்தமாக ஆர்டர் செய்துள்ளான். வீட்டு வாசலில் மணி அடித்ததும், உணவு வினியோகிப்பாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்ததும், அச்சரியமடைந்த சிறுவனின் தந்தை, வீடு முழுதும் உணவுப் பொருள்கள் அடுக்கி வைத்து திகைத்துப் போனார். அதுவரை மகன் மேசன் கேம் விளையாடுவதாகவே கருதிய கெய்த், யார் ஆர்டர் செய்தது என யோசித்துக் கொண்டிருக்கையில், அடுத்தடுத்து ஷாவர்மா, லியோஸி என பல்வேறு உணவகங்களில் இருந்தும், 'சான்ட்விச், பீட்ஸா, ஷவர்மா, பர்கர், ஜம்போ இறால், சாலட், சில்லி சீஸ் பொரியல், ஐஸ்கிரீம்' என உணவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. "இது ஏதோ ஒரு 'சனிக்கிழமை நைட்லைவ்' நாடகம் போல் இருக்கிறேதே," என்று கெய்த் ஸ்டோன்ஹவுஸ் கூறினார்.

பிறகு மகனிடமிருந்து போனை வாங்கிப் பார்க்க, உணவு வினியோக செயலியை பயன்படுத்தி மேசன் உணவு ஆர்டர் செய்ததை அறிந்து திகைத்துப் போன கெய்த், வந்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் அடுக்கினார். பின் இதில் இடம் போதாத நிலையில், அக்கம்பக்கத்து வீட்டாரை அழைத்து அவர்களுக்கும் கொடுத்துள்ளார். பின்னர், வங்கிக் கணக்கைப் பார்த்தபோது, அது காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகிய பிறகு, கெய்த் கணக்கில் இருந்து வந்த ஆர்டர்களை பார்த்து திகைத்துப் போன கிரப்ஹப் நிறுவனம், ஸ்டோன்ஹவுஸ் குடும்பத்தை அணுகி அவர்களுக்கு ரூ.80,000 மதிப்பிலான பரிசுக் கூப்பன்களை அளித்தது. கெய்த் தம்பதியரை, தங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் விளம்பரத்துக்கு பயன்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.

மகனின் துடுக்குத்தனத்தால் பணத்தை இழந்தாலும், ஒரே நாளில் பிரபலமானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கெய்த் குடும்பத்தினர் எல்லாம் நன்றாக நடந்தது, அது நன்றாகவே நடந்தது என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT