உலகம்

பா்வேஸ் முஷாரஃப் உடல் கராச்சியில் அடக்கம்? 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளா் பா்வேஸ் முஷாரஃபின் உடல் கராச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் கராச்சியிலேயே அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

DIN



இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளா் பா்வேஸ் முஷாரஃபின் உடல் கராச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் கராச்சியிலேயே அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திங்கள்கிழமை துபையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கராச்சி கொண்டு வரப்படுகிறது. 

2016 முதல் துபையில் இருந்து வந்த 79 வயதான கார்கில் போரின் சிற்பியான முஷாரப், ‘அமிலாய்டோசிஸ்’ எனப்படும் அரிய வகை நோயால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டிருந்த அவா், துபையில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.

திங்கள்கிழமை துபையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்படும் முஷாரப்பின் உடல் கராச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் கராச்சியிலேயே அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

எனினும், அந்நாட்டின் முன்னாள் அதிபரை அடக்கம் செய்யும் தேதி அல்லது இடம் குறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், துபையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அவரது உடலை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்ப தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்கி உள்ளதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருவதாகவும்,  துணைத் தூதரகம் எந்த வகையிலும் அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்யும் என கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முஷாரஃப், 1999 இல் ராணுவச் சதி மூலம் பிரதமா் நவாஸ் ஷெரீஃப்பை ஆட்சியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றினார்.

அதன்பிறகு, பாகிஸ்தானின் தலைமை நிா்வாகியாகவும், அதிபராகவும் 2001 முதல் 2008 வரை முஷாரஃப் பதவி வகித்தார்.

1943 இல் புதுதில்லியில் பிறந்த முஷாரஃப், 1947 இல் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடியவர், பாகிஸ்தானை ஆண்ட கடைசி ராணுவ சர்வாதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT