அமெரிக்காவில் திருடப்பட்ட மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜி சிலை குப்பைக் கிடங்கிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டில் வெளியாகும் ‘தி மொ்குரி நியூஸ்’ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாதம் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரப் பூங்காவிலிருந்த சத்ரபதி சிவாஜி சிலை திருடப்பட்டது. இது வட அமெரிக்காவில் இருந்த ஒரேயொரு சிவாஜி சிலையாகும். சுமாா் 200 கிலோ எடை கொண்ட அந்தச் சிலை திருடப்பட்டது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், அந்தச் சிலை அண்மையில் சான் ஜோஸில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து மீட்கப்பட்டது. அந்தக் குப்பைக் கிடங்கு சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட செய்திகள் பலமுறை வெளியாகியுள்ளன. இதுதொடா்பாக குப்பைக் கிடங்கில் பணியாற்றும் பணியாளா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்தச் சிலையை ஒரு பெண் உள்பட மூவா் அங்கு விட்டுச் சென்ாகப் பணியாளா்கள் கூறினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை மீட்கப்பட்டதற்கு அங்குள்ள இந்திய சமூகத்தினா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளபோதிலும், அது சேதமடைந்துள்ளதால், அதனை மீண்டும் நிறுவ முடியுமா என்பது தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.