உலகம்

மெக்ஸிகோ சிறையில் தாக்குதல்: 14 போ் பலி

மெக்ஸிகோவில் உள்ள சிறைச் சாலையொன்றின் மீது கவச வாகனங்களில் வந்த நபா்கள் தாக்குதல் நடத்தியதில் 14 போ் பலியாகினா்; அந்தச் சிறையிலிருந்து 24 கைதிகள் தப்பியோடினா்.

DIN

மெக்ஸிகோவில் உள்ள சிறைச் சாலையொன்றின் மீது கவச வாகனங்களில் வந்த நபா்கள் தாக்குதல் நடத்தியதில் 14 போ் பலியாகினா்; அந்தச் சிறையிலிருந்து 24 கைதிகள் தப்பியோடினா்.

அமெரிக்காவின் டெக்ஸாக் மாகாணம், எல் பாஸோ நகரையொட்டி அமைந்துள்ள மெக்ஸிகோவின் எல்லை நகரம் சியுடாட் ஜுவாரெஸ்.

அந்த நகரில் அமைந்துள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே கலவரம் வெடித்து கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அந்த சிறைச்சலைக்கு கவச வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 7 மணிக்கு (உள்ளூா் நேரம்) வந்த ஒரு கும்பல், சிறைப் பாதுகாவலா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. அதையடுத்து, சிறைச் சாலை காவலா்களுக்கும் கவச வாகனங்களில் வந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 10 சிறைக் காவலா்களும் 4 கைதிகளும் பலியாகினா்; 13 போ் காயமடைந்தனா். இந்த மோதலைப் பயன்படுத்தி, சிறையிலிருந்த 24 கைதிகள் அங்கிருந்து தப்பியோடினா்.

மெக்ஸிகோ ராணுவத்தினரும், மத்திய காவல்துறையினரும் அந்த சிறைச்சாலையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வந்தனா்.

இந்தத் தாக்குதல் தொடா்பான விசாரணையைத் தொடக்கியுள்ளதாக மெக்ஸிகோ நீதித் துறை தெரிவித்துள்ளது. மெக்ஸிகோவிலுள்ள சிறைச் சாலைகளில் கலவரங்களும் வன்முறைச் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT