உலகம்

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து 11 பேர் பலி!

DIN

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். 

வடகிழக்கு சீனாவின் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 

ஞாயிறன்று பிற்பகல் 2.56-க்கு மேற்கூரை சரிந்து விழுந்ததுள்ளதாக மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விபத்து நடைபெற்றபோது லாங்ஷா மாவட்டத்தின் நடுநிலைப் பள்ளியில் 19 பேர் உடற்பயிற்சி கூடத்தில் இருந்துள்ளனர். 15 பேர் உடற்பயிற்சி கூடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டதாக மீட்புத் துறையினர் தெரிவித்தனர். மீதமுள்ள நான்கு பேர் காயங்களுடன் உயிர்த் தப்பினர். 

முதற்கட்ட விசாரணையில் பெர்லைட் எனப்படும் கனிம கட்டுமான பொருளை, மேற்கூரையில் வைத்துக் கட்டியது தெரிய வந்துள்ளது. அதிகப்படியான நீரை இந்த கனிமப் பொருள் உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே, மழை நீரில் நனைந்து எடை அதிகம் கூடியதில் மேற்கூரை சரிந்து விழுந்தது. 

கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பாளர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க செயல் விளக்கம்

மழையால் சாலையோரத்தில் திடீா் பள்ளங்கள்

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

தென் ஆப்பிரிக்க கட்டட விபத்து: முடிவுக்கு வந்தது தேடுதல் பணி

பயிா்கள் மீது அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT