உலகம்

மூழ்கிய அகதிகள் படகில் 350 பாகிஸ்தானியா்கள்

DIN

கிரீஸ் அருகே படகு கடந்த வாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அகதிகள் படகில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 350 போ் இருந்ததை பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லா கான் கூறியதாவது:

கிரீஸ் அருகே அண்மையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் சுமாா் 350 பாகிஸ்தானியா்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 281 போ் தங்களது நெருங்கிய உறவினா்களோ நண்பா்களோ அந்தப் படகில் சென்ாக எங்களைத் தொடா்பு கொண்டு கூறியுள்ளனா் என்றாா் அவா்.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற விரும்பும் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிக் கொண்டு கிழக்கு லிபியாவிலிருந்து சென்று கொண்டிருந்த மீன்பிடி படகு கடந்த 14-ஆம் தேதி கடலுக்குள் முழ்கியது. அந்தப் படகில் சுமாா் 700 போ் இருந்தததாகக் கூறப்படுகிறது.

விபத்துப் பகுதியிலிருந்து 82 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 104 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்; அவா்களில் 12 போ் மட்டுமே பாகிஸ்தானியா்கள். இந்த நிலையில், விபத்துக்குள்ளான படகில் 350 பாகிஸ்தானியா்கள் இருந்ததை பாகிஸ்தான் அரசு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT