உலகம்

ஜோ பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை இனி தேவையில்லை: வெள்ளை மாளிகை!

DIN


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடலிலிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஜோ பைடனின் மார்பில் புற்று நோய் திசுக்களால் ஏற்பட்டிருந்த காயமும் குணமடைந்துள்ளதால், அவருக்கு இனி புற்று நோய் சிகிச்சை தேவைப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவரான கெவின் ஓ கான்னர், அதிபருக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை காரணமாக புண் போன்று மார்பில் உருவாகியிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. புற்றுநோய் திசுக்களால் மார்பில் இருந்த காயமும் முழுவதுமாக குணமடைந்துள்ளது. 

இவை ஆரம்பகட்ட புற்றுநோய் திசுக்கள் என்பதால், தொடர் சிகிச்சையால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இவை மற்ற புற்றுநோய் செல்களைப் போன்று பரவுவதில்லை என்றாலும், தீவிரமடையும் என்பதால் முற்றிலும் அழிக்கப்பட்டது என மருத்துவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு

பாத்தகோட்டா ராமா் கோயிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் பிரதிஷ்டை

ஊத்தங்கரையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சீவரம் பட்டில் மிளிறும் அனுமோல்!

போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT