அமெரிக்காவில் விருந்தின்போது துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
அமெரிக்காவில் விருந்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவில் விருந்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவில் ஜார்ஜியாவின் டக்ளஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்விற்காக 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
இதையும் படிக்க- கடலூர் வெடி விபத்து: நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவு
6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்நிகழ்வு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.