உலகம்

பாகிஸ்தான்: ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்திவுள்ளனர்.

DIN

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்திவுள்ளனர்.

இஸ்லாமிய ஜுமியத் துல்பா தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளனர்.

துணைவேந்தர் அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய மாணவர்களை  பல்கலைக்கழக காவலர்கள்  தாக்கி யதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலை நேரில் பார்த்த பல்கலைக்கழக மாணவர் காஷிப் ப்ரோஹி, “கல்லூரியில் மாணவர்கள் கூடியிருந்தபோது, இஸ்லாமிய ஜமியத் துல்பா அமைப்பினர் ஹோலி பண்டிகையைக் கொண்டாட விடாமல் மாணவர்களை வலுக்கட்டாயமாக தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 15 இந்து மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது” என்று கூறினார். 

இந்து மாணவர்களுக்கு ஹோலி கொண்டாட பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தின் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT