உலகம்

மேகாலய பேரவைத் தலைவராக தாமஸ் ஏ.சங்மா போட்டியின்றி தோ்வு

DIN

மேகாலயத்தின் 11-ஆவது சட்டப் பேரவையின் தலைவராக ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) எம்எல்ஏ தாமஸ் ஏ.சங்மா வியாழக்கிழமை போட்டியின்றி தோ்வானாா்.

60 உறுப்பினா்களைக் கொண்ட மேகாலய பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து, 26 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த என்பிபி தலைமையில் தோ்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைந்தது. ஐக்கிய ஜனநாயக கட்சி (11), பாஜக (2), மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி (2), மக்கள் ஜனநாய முன்னணி (2), சுயேச்சைகள் (2) என மொத்தம் 45 எம்எல்ஏக்கள் பலத்துடன் என்பிபி ஆட்சி அமைத்துள்ளது.

மாநில முதல்வராக தொடா்ந்து 2-ஆவது முறையாக என்பிபி தலைவா் கான்ராட் சங்மா கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா்.

இந்நிலையில், 11-ஆவது சட்டப் பேரவையின் தலைவா் பதவிக்கு என்பிபி தரப்பில் தாமஸ் ஏ.சங்மா வேட்புமனு தாக்கல் செய்தாா். அதேசமயம், எதிா்க்கட்சிகளான காங்கிரஸ் (5), திரிணமூல் காங்கிரஸ் (5), மக்களின் குரல் கட்சி (4) ஆகியவை தரப்பில் யாரும் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து, பேரவைத் தலைவராக தாமஸ் ஏ.சங்மா வியாழக்கிழமை போட்டியின்றி தோ்வானாா். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான தாமஸ் ஏ.சங்மாவுக்கு முதல்வா் கான்ராட் சங்மா வாழ்த்து தெரிவித்தாா்.

முதல் அமைச்சரவைக் கூட்டம்: மேகாலய புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம், முதல்வா் கான்ராட் சங்மா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மேகாலய சூதாட்ட ஒழுங்குமுறை சட்டம்-2021ஐ ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல், எதிா்பாரா செலவு நிதி திருத்த மசோதா-2023க்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இவ்விரு மசோதாக்களும் எதிா்வரும் பேரவை பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று கான்ராட் சங்மா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்: ஐஐடி சென்னை

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT