உலகம்

முதல்முறையாக பிறக்காத குழந்தையின் மூளையில் அறுவைசிகிச்சை

உலகிலேயே முதல்முறையாக, பிறக்காத சிசுவின் மூளையில் அறுவைசிகிச்சை செய்து, குழந்தை பிறந்தபிறகு மாரடைப்பு அல்லது மூளையில் பாதிப்பு ஏற்படுவதை அமெரிக்க மருத்துவர்கள் தடுத்துள்ளனர்.

DIN


நியூ யார்க்: உலகிலேயே முதல்முறையாக, பிறக்காத சிசுவின் மூளையில் அறுவைசிகிச்சை செய்து, குழந்தை பிறந்தபிறகு மாரடைப்பு அல்லது மூளையில் பாதிப்பு ஏற்படுவதை அமெரிக்க மருத்துவர்கள் தடுத்துள்ளனர்.

34 வாரக் கருவின் மூளையில் ஏற்படவிருந்த பாக்கவாதத்தை ஏற்படுத்தும் பாதிப்பைக் கண்டறிந்து, கருப்பையில் இருக்கும் குழந்தையின் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அறுவைசிகிச்சை முடிந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு அந்த பெண் குழந்தை பிறந்தது. 1.9 கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்துகள் ஏதும் இல்லாமல் பிறந்தது மருத்துவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குழந்தை நலமாக இருப்பதாகவும், இனி அவருக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். போஸ்டன் சிறுவர்களுக்கான மருத்துவமனை மற்றும் பிரிகம் மகளிர் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினர் இணைந்த இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். 

குழந்தையின் உயிரைக் கருதி மிகவும் சிக்கலான இந்த அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். குழந்தையின் மூளைப் பகுதியில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT