முகப்பு
உலகம்

மெக்சிகோவில் சாலை விபத்தில் 26 பேர் பலி

மெக்சிகோவில் வேனும் டிரக்கின் டிரெய்லரும் மோதியதில் 26 பேர் பலியானார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
கோப்புப்படம்
பகிர்:

மெக்சிகோவில் வேனும் டிரக்கின் டிரெய்லரும் மோதியதில் 26 பேர் பலியானார்கள். 

மெக்சிகோவின் சியுடாட் விக்டோரியா நெடுஞ்சாலையில் வேனும் டிரக்கின் டிரெய்லரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் 26 பேர் பலியானார்கள். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

சம்பவ இடத்தில் இருந்து தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து டிரெய்லரை ஏற்றிச் சென்ற டிரக் அந்த இடத்தில் இல்லை. 

டிரக்கின் ஓட்டுநர் தப்பியோடினாரா அல்லது விபத்தில் அவரும் பலியானாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →