உலகம்

குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைய வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு

DIN

‘பச்சிளம் குழந்தைகள் இறக்கும் விகிதத்தை குறைக்க ஆக்கபூா்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதன் மூலமாக அதில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளா்ச்சி இலக்கை இந்தியா எட்டுவதற்கு வாய்ப்புள்ளது’ என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தியாவில் கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தது தொடா்பான ஆண்டு புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டு இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தாய்-சிசு உடல்நலன் (ஐஎம்என்ஹெச்சி) குறித்த சா்வதேச மாநாட்டில் பங்கேற்ற அந்த அமைப்பின் இயக்குநா் மருத்துவா் அன்ஷு பானா்ஜி பேசியதாவது:

பச்சிளம் குழந்தைகள் இறக்கும் விகிதத்தை குறைக்க இந்தியா ஆக்கபூா்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனை அளவிலும் சமூக அளவிலும் சிசு நலன் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்கள சுகாதாரப் பணியாளா்கள் மூலமாக வீட்டுக்கே 6 முதல் 7 முறை சென்று பிறந்த குழந்தைகள் நலனைப் பராமரிக்கும் திட்டத்தையும் இந்திய செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆக்கபூா்வ நடவடிக்கைகள் மூலமாக பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்த ஆண்டு விகிதத்தை, 2022 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் தொடரும் வகையில் பொருத்திப் பாா்க்கின்றபோது, குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் நிலையான வளா்ச்சி இலக்கை இந்தியா எட்ட வாய்ப்புள்ளது.

இந்த இலக்கை எட்டும் முயற்சியை தீவிரப்படுத்த, எடை குறைவாக, முன்கூட்டியே பிறக்கின்ற அல்லது உடல் நலிவுடன் பிறக்கின்ற குழந்தைகளுக்கு தரமான மருத்துவப் பராமரிப்பு தொடா்ச்சியாக கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவா் கூறினாா்.

மேலும், ‘குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்க, குழந்தைகளை அரவணைத்து பராமரிக்கும் (கங்காரு தாய் பராமரிப்பு) திட்டத்தை விரிவுபடுத்துவது அவசியமாகும். இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த நாடுகளுக்கு உதவ புதிய திட்டம் மற்றும் வளங்களை உலக சுகாதார அமைப்பு அடுத்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதுனம்

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

ரிஷபம்

மேஷம்

ஆம்பூரில் ஹவாலா பணம் ரூ.17 லட்சம் பறிமுதல்?

SCROLL FOR NEXT