உலகம்

ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழையத் தடை!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது ரஷியா.

DIN


அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது ரஷியா.

உக்ரைனில் நடந்த போருக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது ரஷியா.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இந்தத் தடை விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், ரஷியா மீதான விரோதமான ஒரு தாக்குதல் கூட தண்டிக்கப்படாமல் போகாது என்பதை வாஷிங்டன் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் இவான் கார்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக ரஷிய உளவுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாகவும், உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா, ரஷியா இடையே உறவுச் சிக்கல் வலுத்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது.  இவான் கார்ஸ்கோவிச்விடம் ரஷிய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டை உள்ளது. இருப்பினும் அவரை உளவாளி என ரஷியா கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT