கோப்புப்படம் 
உலகம்

800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம்

DIN

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பா் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.

உலக மக்கள்தொகை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.

மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060-ஆம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT