உலகம்

கடந்த 20 நாட்களில் துருக்கியிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய 3,000 புலம்பெயர்ந்தோர்!

DIN

கடந்த இருபது நாட்களில் துருக்கியிலிருந்து ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுல்லிற்கு இதுவரை 3,000 புலம்பெயர்ந்த மக்கள் திரும்பியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை மொத்தம் 3090 பேர் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 7 குடும்பங்களும் 7 குழந்தைகளும் அடங்குவர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 36,996,000 ஆப்கானிய மக்களில், 3,083 பேருக்கு இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பான ஐஓஎம் (IOM) பொருளாதார ரீதியாக உதவ முன்வந்துள்ளது. இந்த அமைப்பு மூலம் 1402 பேர் மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளதாகவும், 2,416 பேர் தொடர்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காபுல் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தலிபான் தலைமையினான அகதிகள் விவகார அமைச்சகம் மற்றும் அகதிகள் இடம்பெயர்வுக்கானக் கூட்டு அமைச்சகம், அரசாங்க மாற்றத்தின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் சமீபமாக ஈரான், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் புலம்பெயர்ந்த ஆப்கானிய மக்களை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் பணியை அதிகமாக்கியுள்ளன. 

மேலும் 6,000த்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஒரே நாளில் ஆப்கான் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் அகதிகள் அமைச்சகம் கடந்த நவம்பர் 11 அன்று வெளியிட்ட தகவலின்படி டோர்கம் மற்றும் போல்டக் கடக்கும் வழியாக இதுவரை 6,101 மக்கள் ஆப்கானுக்குத் திரும்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

2021 ஆம் ஆண்டில் தாலிபானால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றபோது அங்கிருந்து பலர் வெளியேறினர். வெளியேறிய மக்களுக்கு மீள்குடியேற்றத் திட்டங்களை, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் ஏற்படுத்திக் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலாவதியான பாகிஸ்தான் விசாக்களும், நீண்ட மீள்குடியேற்றச் செயல்முறைகளும் அவர்கள் நாடுகடத்தப்படக் காரணமாக அமைந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

SCROLL FOR NEXT