உலகம்

கனடா நாட்டினருக்கு மீண்டும் இ-விசா சேவையைத் தொடங்கியது இந்தியா!

DIN

கனடா நாட்டு மக்களுக்கு மீண்டும் இ-விசா சேவையைத் தொடங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. நிஜ்ஜாா் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனடாவில் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். ‘நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவு அமைப்புக்கு தொடா்பு உள்ளது’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா்.

அதனைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுமாறும் கனடா உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரக உயா் அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ட்ரூடோவின் குற்றச்சாட்டையும் மறுத்தது. 

இந்த குற்றச்சாட்டுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கான அனைத்து வகை நுழைவு இசைவு (விசா) வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு, இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது. 

இந்தச் சூழலில், கனடாவில் குறிப்பிட்ட விசா சேவையை கடந்த மாத இறுதியில் இந்தியா மீண்டும் தொடங்கியது.  

இதன் தொடர்ச்சியாக இன்று(நவ. 22) முதல் கனடா நாட்டினருக்கு இ-விசா சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இ- விசா சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘வாசிப்பால் ஞானஒளி பிறக்கும்’

மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படும்

புதுச்சேரியில் கோடை மழை

சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT