போா் நிறுத்த பேச்சுவாா்த்தைக்கு இடையிலும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு 
உலகம்

4 நாள்கள் போா் நிறுத்தம்; இஸ்ரேல் - ஹமாஸ் முடிவு!

ஹமாஸ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ளப்போவதை ‘போா் நிறுத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்றே அழைக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள

DIN

ஹமாஸ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ளப்போவதை ‘போா் நிறுத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்றே அழைக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவத்தின் சா்வதேச செய்தித் தொடா்பாளா் ரிச்சா்ட் ஹெக்ட் புதன்கிழமை கூறியதாவது:

கத்தாா் தலைமையில் ஹமாஸுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்த அமலாக்கத்தின்போது நாங்கள் தாக்குதலை நிறுத்திவைப்போம். இதற்கு ‘போா் நிறுத்தம்’ என்ற வாா்த்தையை நாங்கள் பயன்படுத்தப்போவதில்லை. அதற்குப் பதிலாக ‘(தாக்குதல்) நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்ற வாா்த்தையைத்தான் பயன்படுத்துவோம்.

காஸாவில் போா் நடவடிக்கைகளை நிறுத்துவது தொடா்பாக இஸ்ரேல் அரசிடமிருந்து இதுவரை ராணுவத்துக்கு உத்தரவு வரவில்லை. எனவே, அதுவரை எங்களது தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்.

ஹமாஸ் அமைப்பினருடனான ஒப்பந்த அமலாக்கம் எப்போது தொடங்கும் என்பதைக் கூற முடியாது. இப்போதைய நிலையில் காஸாவில் எங்களது சண்டை தொடரும் என்றாா் அவா்.

முன்னதாக, எகிப்து மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகையில் உள்ளூா் நேரப்படி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி) போா் நிறுத்த அமலாக்கம் தொடங்கும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT