மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ், நகைச்சுவைப் பிரிவில் சர்வதேச எம்மி விருது வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
உலகளவில் மேடை நகைச்சுவையாளராகப் புகழ்பெற்றவர் வீர் தாஸ். இவர் நிகழ்த்தி, நெட்பிளிக்ஸில் வெளியான ‘வீர் தாஸ்: லேண்டிங்’ தொடருக்கு சர்வதேச எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது.
தொலைகாட்சி மற்றும் ஓடிடி நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்படும் பெருமைமிகு விருதுகளில் ஒன்று சர்வதேச எம்மி விருதுகள். இந்த விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
நகைச்சுவை பிரிவுக்கான இந்தாண்டு விருது வீர் தாஸுக்கும் மற்றும் பிரிட்டிஷ் இணையதொடரான ‘டெர்ரி கேர்ள்ஸ்’ தொடருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் நடந்த நிகழ்வில் இதனைப் பெற்றுக் கொண்ட வீர் தாஸ் தனது பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “பெரிய தருணங்களின் பின்னணியில் சின்ன நிகழ்வுகள் உள்ளன. நாம் எம்மி வென்றுள்ளோம். பத்திரிக்கையாளர் சந்திப்புக்குச் செல்லும் வழியில் சமையலறை வழியாகச் சென்றோம். எனது உதவியாளர் ரெக், ‘நீங்கள் ஒரு காலத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்துள்ளீர்கள்தானே. எனில் இங்கிருந்து புகைப்படம் எடுப்பதுதான் சரி எனச் சொன்னார்’. இந்த நாளின் சிறந்த புகைப்படம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நூற்றுக்கணக்கான மசூதிகளை இடிக்கும் சீனா!
அவரது ரசிகர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.