முகப்பு
உலகம்

நியூஸிலாந்து பிரதமராக லக்ஸன் பொறுப்பேற்பு

நியூஸிலாந்தின் 42-ஆவது பிரதமராக கிறிஸ்டோஃபா் லக்ஸன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:31 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

நியூஸிலாந்தின் 42-ஆவது பிரதமராக கிறிஸ்டோஃபா் லக்ஸன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

53 வயதாகும் முன்னாள் தொழிலதிபரான அவரது தேசியக் கட்சி, கடந்த மாதம் 14-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதையடுத்து, 2 சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அவா் ஆட்சிமைத்துள்ளாா்.

தலைநகா் வெலிங்கடனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், கிறிஸ்டோஃபா் லக்ஸனுக்கு கவா்னா்-ஜெனரல் சிண்டி கீரே பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

Advertisement

தனது அரசின் முதல் 100 நாள் திட்டம் குறித்து புதிய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (நவ. 28) கூடி விவாதிக்கும் என்று பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு லக்ஸன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.